மக்களவையில் நுழைந்த நபருக்கு பாஜக எம்.பி பெயரில் அனுமதி சீட்டு..!!

நாடாளுமன்றத்தின் மக்களவையில் பூஜ்ய நேரம் நடந்து கொண்டிருந்தபோது, மதியம் 1 மணியளவில் பார்வையாளர்கள் வரிசையில் இருந்து 2 பேர் அத்துமீறி உள்ளே குதித்தனர்.

அப்போது அவர்கள் மஞ்சள் வண்ண புகையை வெளிப்படுத்தும் உலோக பொருளை வெடிக்க செய்தனர். இதனால், அவையில் இருந்த எம்.பி.க்கள் இடையே அதிர்ச்சி ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவை உடனடியாக ஒத்தி வைக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்த நபர்களில் ஒருவரிடம் இருந்த நுழைவுக்கான அனுமதி சீட்டில் சாகர் சர்மா என அவருடைய பெயர் குறிப்பிடப்பட்டு இருந்தது. அவருக்கு பா.ஜ.க. எம்.பி. பிரதாப் சிம்ஹா பெயரில் அந்த அனுமதி சீட்டு வழங்கப்பட்டு உள்ளது என தெரிய வந்துள்ளது.

மற்றொரு நபர் கர்நாடகா மாநிலம் மைசூரு நகரை சேர்ந்த டி. மனோரஞ்சன் என்பதும் அவர் ஒரு என்ஜினீயர் என்பதும் தெரிய வந்துள்ளது.

RELATED ARTICLES

Recent News