புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத் தொகை – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. மழை ஓய்ந்த பிறகும் வெள்ளம் வடியாததால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த மக்கள் மிகுந்த அவதி அடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 6000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த நிவாரணத் தொகை பாதிக்கப்பட்டவர்கள் குடியிருக்கும் பகுதிகளில் உள்ள நியாய விலை கடைகள் மூலம் வாங்கி கொள்ளலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

புயல் வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 4 லட்சத்திலிருந்து 5 லட்ச ரூபாயாக உயர்த்தி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News