ஷார்ஜாவில் வங்கி ஒன்றில் பணிபுரிந்து வந்தவர் லக்ஷ்மிகா சஜீவன். இவருக்கு 24 வயது ஆகும் நிலையில் , சினிமா மீது இருந்த ஆர்வத்தால் நடிப்பில் கவனம் செலுத்திவந்தாா்.மேலும், மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடித்த ‘சவுதி வெள்ளக்கா’, ‘உயரே’ போன்ற படங்களிலும் இவர் நடித்துப் புகழ்பெற்றார். இந்த நிலையில், அவர் திடீரென மாரடைப்பால் இறந்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
வங்கியில் பணிபுரிந்து வந்தபோது இவருக்கு இந்த திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக தொிகிறது. இளம் வயதில் இவா் மாரடைப்பால் இறந்துள்ளது ரசிகர்களையும், திரையுலகினரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இவரது மறைவுக்கு ரசிகர்களும், திரைவட்டாரங்களும்
இரங்கல் தொிவித்து வருகின்றனா்.