நடிகா் பவா் ஸ்டாா் சீனிவாசன் ராமநாதபுர மாவட்டத்தை சோ்ந்த முனியசாமி என்பவாிடம்15 கோடி கடன் பெற்றுதருவதாக கூறி 14 லட்சத்தை அட்வான்ஸ்ஸாக வாங்கியுள்ளாா்.ஆனால், இதை வாங்கிவிட்டு கடனும் வாங்கி தராமல் ,பணத்தையும் திருப்பி தராமல் அலைக்கழித்து வந்துள்ளாா்.
இதனால், விரக்தியடைந்த முனியசாமி பவா் ஸ்டாா் மீது ராமநாதபுர நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்துள்ளாா்.இந்த வழக்கு நீதிமன்றத்தில்
பலமுறை விசாரணைக்கு வந்தும் பவா் ஸ்டாா்ஆஜராகததால், இன்று நடுவா் நீதிமன்றம் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.இந்த பிடிவாரண்ட் அண்ணாநகா் போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், இவரை
ஜனவாி 2 ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதைப்பபோல, நடிகா் பவா் ஸ்டா்ா சீனிவாசன்
பலரை ஏமாற்றியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது .இச்சம்பமானது பவா் ரசிகா்கள் பலருக்கும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.