முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி திடீர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள துரை தயாநிதியை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.
துரை தயாநிதிக்கு மூளை பக்கவாத பிரச்னைகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக அவர் சிகிச்சை பெற்றுவருகிறார். இது பற்றி அறிந்ததும் மு.க அழகிரி மதுரையில் இருந்து சென்னை வந்துள்ளார்.