திருடுபோன இரண்டு டாரஸ் லாாிகள் ! பிறகு என்ன நடந்தது இதோ ..?

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் உள்ள .எல்.ஐ.சி அலுவலகம் அருகே சரக்கு ஏற்றி செல்லாத நாட்களில் லாரிகளை அதன் உரிமையாளர்கள்
நிறுத்தி விட்டு செல்வது வழக்கம். மீண்டும் லோடு வரும்வரை, அங்கேயே லாரிகள் நின்றிருக்கும்.

அதுபோல் விருத்தாசலம் திரு.வி.க நகரை சேர்ந்த வரதராஜன் மற்றும் சித்தேரிகுப்பத்தை சேர்ந்த தனசேகரன் ஆகிய இருவருக்கு சொந்தமான 10 மற்றும் 12 சக்கர டாரஸ் லாரிகளை அந்த இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று இரவு 11:30 மணியளவில், சம்பவ இடத்திலிருந்து இரு லாரிகளையும் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இரண்டு லாரிகளும் உளுந்தூர்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தபோது முகமது அலி என்ற நபர் திருடி சென்ற லாரி வயலூர் ரயில்வே மேம்பாலத்தில் மோதி நின்றுள்ளது.

அப்போது அந்த வழியே சென்ற சிலர் மேம்பாலத்தில் லாரி மோதி நின்றுருப்பதை கண்டு, லாரி உரிமையாளர்களான தனசேகரன் மற்றும் வரதராஜன் இருவருக்கும் தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து லாரி உரிமையாளர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் சென்று பார்த்தபோது ஒரு லாரி மேம்பாலத்தில் மோதி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து லாரியை திருடி ஒட்டி சென்ற முகமது அலி என்ற நபரை காவல்துறையினர் பிடித்தனர்.

மற்றொரு லாரி குறித்து விசாரித்த போது அந்த லாரி தன்னை கடந்து முன்னால் சென்று விட்டதாக முகமது அலி. தெரிவித்துள்ளார்

மேலும் அந்த லாரியை போலீசார் தேடி சென்றிருந்தபோது பூவனூர் அருகே ,லாரி டீசல் இல்லாமல் நின்றுருப்பதை கண்ட காவல்துறையினர் லாரியை மீட்டனர்.

சம்பவம் குறித்து விசாரணை செய்த விருத்தாசலம் காவல்துறையினர் லாரியை கடத்திச் சென்ற திண்டுக்கல் மாவட்டம் வேடம்பட்டியை சேர்ந்த முகமது அலி என்றவரை கைது செய்தனர்.

மேலும் தப்பியோடிய திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த கார்த்தி என்ற இரண்டு நபர்களை விருத்தாசலம் காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்

RELATED ARTICLES

Recent News