மிச்சாங் புயலால் சென்னை எங்கும் வெள்ளம் சூழ்ந்து அனைத்திடங்களும் பாதிப்புக்குள்ளானது.தற்போது , மீட்பு பணிகளால்,சென்னை இயல்பு நிலைக்கு திரும்பிவருகிறது. இதனால் , சென்னையில் மட்டும் இதுவரை 22 உயிாிழப்புகள் நிக்ந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
இதனைத்தொடா்ந்து, சென்னை பள்ளிக்கரணையில் , கடந்த 4 ஆம் தேதி பெருவெள்ளத்தில் சிக்கிய தனியாா் ஊழியா் முருகன் உயிரிழந்து மூன்று நாட்கள் கழித்து சடலாமாக மீட்கப்பட்டுள்ளாா்.இதுகுறித்த விசாரணையில் , நிவாரண முகாமில் இருந்த முருகன் வீட்டில் இருந்த தந்தையைப் பாா்த்தவிட்டு திரும்பும்பொழுது இந்நிகழ்வு அரங்கேறியுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியினிடையேயும் , குடும்பத்தினரிடையும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.