பெருநகர சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் சின்ன போரூர் அருகே செயல்பட்டு வரும் நகர்புற சமுதாய நல மருத்துவமனையில் மழை நீர் குலம் போல் சூழ்ந்துள்ளது. இதனால் மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வெளியேற்றப்பட்டனர்.
மழை நின்று நான்கு நாட்கள் ஆகியும் தண்ணீரை வெளியேற்ற மாநகராட்சி அதிகாரிகள், எம்எல்ஏ என யாரும் முன் வராததால் அரசு மருத்துவமனை வளாகம் முழுவதிலும் மழை நீர் குலம் போல தேங்கி காட்சியளிக்கிறது.. இதனால் மருத்துவமனைக்கு வரக்கூடிய நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள் அனைவரும் இடுப்பு அளவு தேங்கிய மழை நீரில் மூழ்கியபடி பயணித்து வந்து திரும்பிச் செல்லக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.
மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் மருத்துவமனையில் உள்ள செவிலியர்கள், பணியாளர்கள் ஆம்புலன்ஸ் மூலம் பாதுகாப்பாக வரவழைக்கப்பட்டு கையொப்பமிட்டு மீண்டும் திரும்பி செல்கின்றனர்..சம்பந்தப்பட்ட வளசரவாக்கம் மண்டல அதிகாரிகளின் அலட்சியத்தால் அரசு மருத்துவமனையை இழுத்து பூட்டு போட்டு போகும் நிலைக்கு தள்ளபட்டுள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட எம்எல்ஏ, துறை சார்ந்த அமைச்சர்கள் உடனடியாக மருத்துவமனையை ஆய்வு செய்து நோயாளிகள் சிரமத்தை போக்க வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.