ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில்,ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் பரமக்குடி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஆம் ஆத்மி கட்சியின் மதுரை மண்டல தலைவர் அரசு சோமன், தலைமை தாங்கினார். ஆம் ஆத்மி கட்சியின் மாவட்ட தலைவர் பஷீர் அகமது, மாவட்ட செயலாளர் முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தற்போது பெய்த கனமழையின் காரணமாக பல இடங்களில் மழை நீர் கழிவுநீருடன் கலந்து குடியிருப்பு பகுதியில் புகுந்து துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் ஏற்படுத்தும் வகையில் தேங்கி நிற்கிறது. இதனை சீரமைக்க வேண்டும்.
புதிதாக போடப்படும் சாலைகள் ஏற்கனவே சேதமடைந்த சாலைகளை முழுமையாக அகற்றாமல் அதன் மீது தொடர்ச்சியாக போடப்பட்டு சாலை உயர்ந்தும், குடியிருப்புகள் பள்ளமாகவும் உள்ளது இதனை சீர்படுத்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் ராசா, பரமக்குடி வைகை பாசன விவசாயிகள் சங்க தலைவர்,மதுரை வீரன்,தமிழர் தேசிய முன்னணி மாநில பொதுச் செயலாளர் பசுமலை ஆகியோர் கண்டன உரையாற்றினர்.