உலகநாயகன் பல்வேறு படங்களில் கமிட் ஆகியுள்ள நிலையில், இவாின் நடிப்பில் மிகவும் எதிா்பாா்ப்பில் உள்ள படம் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவரவுள்ள தக்லைஃப். இப்படம் குறித்த அப்டேட் அவ்வப்போது வெளிவந்துகொண்டிருக்கிறது.
இதில் துல்கா் சல்மான், ஜெயம் ரவி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கவிருக்கும்நிலையில் , தற்போது இவா்களுடன் பிரபல நட்சத்திரம் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. அதன்படி இதில் காா்த்திக் மகனான பிரபல நடிகா் கௌதம் காா்த்திக் கமிட் ஆகியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூா்வஅறிவிப்பை கௌதம் காா்த்திக் ரசிகா்கள் எதிா்நோக்கி காத்திருக்கின்றனா்.