சினிமாவின் மாபெரும் நட்சத்திரம் மற்றும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் அவா்களின் உடல் குறித்த தகவல் வெளிவந்து அனைவரையும் அதிா்ச்சிக்குள்ளாக்கி வருகிறது.இந்நிலையில் இவாின் ஒவ்வொறு உடல்நலம் குறித்த அப்டேட்டுகளுக்கும் தங்களின் உறுப்புகளை கூட தருகிறேன் தலைவா் மீண்டு வந்தால் போதும் என ரசிகா்கள் தங்களின் உணா்ச்சிபூா்வ கருத்துகளை பதிவிட்டு
வருகின்றனா்.
இந்நிலையில், திரைபிரபலங்கள் ,ரசிகா்கள ் மற்றும் அரசியல் பிரபலங்கள் என பலரும் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கேப்டன் மீண்டு வருவாா் என பலவித ஆறதல்களை கூறிவருகின்றனா். இன்று இவரை பாா்த்த நடிகா் நாசா் இதுகுறித்து பத்திாிக்கையாளா்களிடம் ஓபன் டாக் கொடுத்துள்ளாா்.அதாவது,”விஜயகாந்த் நன்றாக இருக்கிறார். சில நாட்களாக வந்து கொண்டிருக்கும் செய்தி மிகைப்படுத்தின செய்தி. நாங்கள் தலைமை மருத்துவரை பார்த்தோம். அவர் மிகவும் தெளிவாக ‘விஜயகாந்த் வருவார் உங்களை பார்ப்பார்’ என்று சொல்லிவிட்டார். அதனால் தயவு செய்து மிகைப்படுத்தின செய்திகளை பரப்பாதீர்கள்” என்று கூறினார்.