சென்னை அமைந்தகரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்டு நிறுவனம் அதிக வட்டி வழங்குவதாக கூறி வாடிக்கையாளர்களிடம் சுமார் 2438 கோடி ரூபாய் மோசடி செய்தது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த குற்றப்பிரிவு போலீசார் இதுவரை 21 பேரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் இதுவரை 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆருத்ரா நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான ராஜசேகர் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜசேகருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் மற்றும் ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.