நடிகை த்ரிஷா மன்சூா் சா்ச்சை குறித்து குஷ்பு சேரி என்று சில அவதூறு வாா்த்தைகளை பேசிவிட்டு இந்த சேரி என்ற வாா்த்தைக்கு அன்புதான் அா்த்தம் எனக்கூறி சமூகவலைதளங்களில் சிலபகிா்வுகளை பகிா்ந்தாா்.
இவா் கூறியது தவறு என்று பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டனா்.இந்நிலையில் எஸ்சி ,எஸ்டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி இந்திய குடியரசு கட்சியின் சாா்பில் சென்னை காவல் ஆணையா்
அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இந்திய குடியரசு கட்சியின் மைய மாவட்ட செயலாளர் கபிலன், “சமீபத்தில் நடிகர் மன்சூர் அலிகான் நடிகை த்ரிஷா குறித்து கூறிய கருத்தை கண்டிக்கும் வகையில் பாஜகவின் தேசிய மகளிரணி நிர்வாகியும் நடிகையுமான குஷ்பு தனது சமூக வலைதள பக்கத்தில் சேரி பாஷை போல் உள்ளது என சுட்டிக்காட்டி இருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வந்த நிலையில் ஒடுக்கப்பட்ட மக்களாகிய எஸ்சி, எஸ்டி மக்களின் பேச்சை கொச்சைப்படுத்தி பேசியது கண்டிக்கதக்கது.
நடிகை த்ரிஷாவுக்காக ஆதரவு தெரிவிக்க யாரையோ இழிவுப்படுத்த எஸ்சி, எஸ்டி மக்களின் பேச்சை விமர்சித்த நடிகை குஷ்பு குறைந்தபட்சம் மன்னிப்பு கூட கேட்காமல் திமிராக சேரி பாஷையை புதுவிதமாக அர்த்தமும் கூறிவிட்டு அதற்காக அன்பு என பெயர் வைத்து சினிமா பாணியில் நாடகத்தை அரங்கேற்றி வருகிறார். ஆகையால் நடிகை குஷ்பு மீது காவல்துறை எஸ்சி, எஸ்டி சாதிய வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.