திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த வீரகமோடு பகுதியில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் நேற்று ஒருவர் மது பாட்டில் ஒன்றை வாங்கியுள்ளார். அந்த பாட்டிலை திறந்து பார்த்த போது அதில் பல்லி ஒன்று இறந்து கிடந்துள்ளது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக அந்த டாஸ்மாக் கடைக்கு சென்று வேறு பாட்டிலை தருமாறு கேட்டுள்ளார். அதற்கு அந்த டாஸ்மாக் ஊழியர்கள் “மது பாட்டிலை எதற்காக திறந்து எடுத்து வந்தீர்கள். அப்படியே எடுத்துக் கொண்டு வர வேண்டியது தானே” என பல்வேறு கேள்விகளை கேட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த நபர் தனது செல்போனில் அனைத்தையும் வீடியோவாக பதிவு செய்தார். நான் மது போதையில் இருக்கிறேன். தெரியாமல் பல்லி விழுந்த பாட்டிலில் உள்ள மதுவை நான் குடித்திருந்தால் இந்த நேரம் செத்துபோய் இருப்பேன். எனது சாவுக்கு யார் காரணம்? என கேட்டு வீடியோவை வெளியிட்டுள்ளார்.