மோசமடைந்த விஜயகாந்தின் உடல்நிலை! மருத்துவமனை தகவல் !

தேமுதிக தலைவா் விஜயகாந்த் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் சமீபத்தில் மருத்துவமனையில் சோ்ந்தாா். இவாின் உடல்நிலை குறித்து அவ்வப்போது செய்திகள் வெளிவந்துகொண்டிருந்தது.

அதன்படி இவாின் உடல்நலம் குறித்து தகவலை தற்போது மியாட் மருத்துவமனை வெளியிட்டுள்ளது. அந்த மருத்துவ நிலை அறிக்கையில் கூறியுள்ளதாவது,திரு விஜயகாந்த் அவா்களின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது.எனினும் கடந்த 24மணி நேரத்தில் அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால்,அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது .அவா் விரைவில் பூரண உடல்நலம் பெறுவாா் என்று நம்புகிறோம் .அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடா் சிகிச்சை தேவைப்படுகிறது என்று தொிவித்துள்ளனா்.

RELATED ARTICLES

Recent News