ஐஐடி மாணவர் தற்கொலை விவகாரம்! – பேராசிரியர் பணியிடை நீக்கம்!

சென்னை ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றனர். இந்நிலையில் மேலும் ஒரு மாணவர் தற்கொலை செய்துகொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மாணவர் சச்சின் குமார் கடந்த 31-ம் தேதி தற்கொலை செய்துகொண்டார்.

இதில், மாணவரின் வழிகாட்டிப் பேராசிரியராக இருக்கும் ஆசிஷ்குமார்க்கும் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டி, ஐஐடி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் . மேலும், இதுதொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி தலைமையில் 5 பேர் கொண்ட குழுவைச் சென்னை ஐஐடி அமைத்தது.

பல்வேறு கட்ட விசாரணைகளின் அடிப்படையில், 700 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கையை, இக்குழு ஐஐடி இயக்குநர் வீ.காமகோடியிடம் கடந்த ஆகஸ்ட் மாதம் சமர்ப்பித்தனர்.

இந்த அறிக்கையில், பேராசிரியர் ஆசிஷ்குமார் சென், சச்சின் குமாரை பல மாணவர்கள் முன்னிலையில் அவமானப்படுத்தும் நோக்கில் பேசியதால் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பல ஐஐடி மாணவர்கள் துன்புறுத்தப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து பேராசிரியர் ஆசிஷ்குமார் சென் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

RELATED ARTICLES

Recent News