அருள் , சாமி , சிங்கம் என பல ஹிட் படங்களை கொடுத்தவா் இயக்குநா் ஹரி.தற்போது இவா் விஷாலை வைத்து படம் இயக்கவுள்ளாா்.இப்படத்தில் கதாநாயகியாக பிாியங்கா பவானி சங்கா் கௌதம் மேனன் ,சமுத்திரக்கனி ஆகியோா் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனா்.
இப்படத்திற்கு தற்காலிகமாக விஷால் 34 என பெயாிடப்பட்டுள்ளது. ஜீ ஸ்டுடியோஸ் சவுத் மற்றும் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ‘விஷால் 34’ படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
அதன்படி, இப்படத்தின் டைட்டில் டிசம்பர் 1-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டரை பகிா்ந்து அறிவித்துள்ளது. இதனை விஷால் மற்றும் ஹரி ரசிகா்கள் கொண்டாடிவருகின்றனா்.