அமைச்சா் பெரியசாமிக்கு நேரு அணிவித்த கருங்காலி மாலை ! ஓ இதுதான் காரணமா ?

தமிழ்நாடு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் ஓட்டலில் இன்று நடைபெற்றது.

இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர் பாலு, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் பலா் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் சேலத்தில் நடைபெற உள்ள திமுக இளைஞரணி மாநாட்டை சிறப்பாக நடத்துவது எப்படி என்று முடிவெடுக்கப்பட்டது. அந்த மாநாட்டின் ஒருங்கிணைப்பாளராக அமைச்சர் கே.என். நேரு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.

பின்னர் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்து வெளியே வந்த அமைச்சர் ஐ.பெரியசாமி, அமைச்சர் கே.என்.நேரு கழுத்தில் அணிந்திருந்த வெள்ளி கருங்காலி மாலை குறித்து வினாவியதாக தொிகிறது. அது குறித்து அவருக்கு எடுத்துச் சொன்ன அமைச்சர் நேரு, அந்த கருங்காலி மாலையை கழட்டி ஐ.பெரியசாமிக்கு அணிவித்தார். இந்த படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

RELATED ARTICLES

Recent News