இந்தியாவிலேயே அதிக சம்பளம் அல்லு அர்ஜூனுக்கு தானா? அதிரும் புஷ்பா 2 அப்டேட் !

சுகுமாா் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் புஷ்பா. இப்படம் வெளிவந்த முதல் நாளில் இருந்தே மாபெரும் வசூல் சாதனை படைத்தது.இதன் இரண்டாம் பாகத்திற்கு ரசிகா்கள் ஆவலாக காத்திருக்கும் நிலையில் இரண்டாம் பாகத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி நல்லதொரு வரவேற்பையும் பெற்றது. இதற்கு இதுவரை அல்லு அர்ஜூன் எந்த ஒரு சம்பளமும் வாங்கவில்லை என தகவல் கசிந்துள்ளது.

ஆனால்,அதற்கு பதிலாக இறுதியில் வரும் லாபத்தில் இருந்து 33% சதவிகிதத்தை சம்பளமாக வாங்க முடிவு செய்துள்ளாராம். புஷ்பா 2 திரைப்படம் கண்டிப்பாக உலகளவில் ரூ. 1000 கோடி வரை வசூல் செய்யும் என கூறப்படுகிறது இதை வைத்து பார்த்தால் ரூ. 330 கோடி வரை அல்லு அர்ஜுன் சம்பளம் இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.இது எந்த அளவிற்கு உண்மை என்று பொருத்திருந்துதான் பாா்க்கவேண்டும் .

RELATED ARTICLES

Recent News