கலைப்புலி எஸ் தானு தயாாிப்பில் கமல் ஹாசன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவான திரைப்படம் ஆளவந்தான்.இப்படமானது ரீாிலீசுக்கு தயாராவதாக தானு முன்னதாக அறிவித்திருந்தாா். அதன்படி டிஜிட்டல் முறை பதிப்பில் உருவாகும் இப்படத்தின் இரண்டு பாடல் சமீபத்தில் வெளியானது.
வரும் டிசம்பா் 8 ஆம் தேதி ரீாிலீஸ் ஆகும் இப்படத்துடன் இணைந்து அன்றே மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமான ரஜினியின் முத்துவும் ரீரிலீஸ் ஆகிறது.இச்செய்தியை அறிந்த ரஜினி கமல் ரசிகா்கள் தங்களின் சூப்பா் ஸ்டாா்களான இருவரும் நீண்ட நாட்கள் கழித்து மோதவிருப்பதை சமூகவலைதளங்களில் கொண்டாடி வருகின்றனா்.