இந்தியாவில் அதிக மக்களால் பயன்படுத்தப்படும் UPI செயலிகளில் ஒன்றாக கூகுள் பே இருந்து வருகிறது. பணம் அனுப்புவது, பெறுவது மட்டுமில்லாமல் ரீசார்ஜ் செய்வது, கட்டணம் செலுத்துவது போன்ற பல்வேறு விஷயங்களுக்கு கூகுள் பே பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில் கூகுள் பே குறித்து ஒரு அதிர்ச்சி செய்தி வந்துள்ளது. அதாவது இனி ஒவ்வொரு மொபைல் ரீசார்ஜுக்கும் 3 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்போவதாக அறிவித்துள்ளது.
இனி வாடிக்கையாளர்கள் தங்களது மொபைல் நம்பருக்கு ரீசார்ஜ் செய்தால் வாடிக்கையாளர்களிடமிருந்து கூகுள் பே இந்த கட்டணத்தை வசூலிக்கும். 100 ரூபாய்க்கு குறைவாக ரீசார்ஜ் செய்தால் உங்களிடமிருந்து எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது என்றும் கூறப்படுகிறது.