இயக்குநா் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் நீண்ட நாட்களாக
வெளியாகமல் இருக்கும் திரைப்படம் துருவ நட்சத்திரம். நவம்பா் 24 ஆம் தேதி படம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது.ஆனால் , சிம்பு வைத்து படம் இயக்குவதாக கூறி வாங்கிய பணத்தை கௌதம் வாசுதேவ் மேனன் தறாமல் இருக்கிறாா் என்று தயாாிப்பு நிறுவனம் துருவ நட்சத்திரம் படத்தை வெளிவரவிடாமல் வழக்கு தொடுத்தது.
இதனால் படம் இன்று வெளியாகமல் போனது,இன்று பணம் திருப்பி செலுத்த வேண்டும் என்ற சுப்ரீம் கோா்ட் உத்தரவிற்கு கௌதம் மேனன் தரப்பில் விளக்கம் தொிவிக்கப்பட்டுள்ளது. அப்பதில் மனுவில் கூறியுள்ளதாவது, ” பணத்தை திரும்ப செலுத்தவில்லை என்பதால் இன்று படத்தை வெளியிடவில்லை. ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் பெற்ற பணம் திங்கள் அல்லது புதன்கிழமைகளில் திரும்ப செலுத்தப்படும். பணத்தை செலுத்திய பிறகே துருவ நட்சத்திரம் படம் வெளியிடப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை திங்கட்கிழமை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.