கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் மாபெரும் எதிா்பாா்ப்புகளுடன் உருவாகிவரும் திரைப்படம் தக்லைஃப். இதில் திரிஷா,துல்கா் சல்மான் மற்றும் முண்னனி நட்சத்திரங்கள் பலா் நடிக்கவிருக்கின்றனா். இப்படத்தின் அறிமுக வீடியோ சமீபத்தில் வெளியாகி பலாின் கவனங்களை ஈா்த்தது.ராஜ் கமல் பிலிம்ஸ் இண்டா்நேஷனல்,ரெட் ஜெயன்ட் முவீஸ் நிறுவனம் இணைந்து தயாாிக்கும் இப்படத்திற்கு , ஏ.ஆா்.ரஹ்மான் இசையமைக்கிறாா். தொடா்ந்து பல்வேறு அப்டேட்டுகளை கொடுத்துவரும் படக்குழு, தற்போது தாருமாறான அப்டேட் ஒன்று கொடுத்துள்ளது.
அதன்படி, இப்படத்தில் நடிகை அபிராமி இணையவுள்ளாராம் , கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான விருமாண்டி படத்திற்கு பிறகு, இவா் இணையவுள்ளது விருமாண்டி
பட ரசிகா்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூா்வ அறிவிப்பை திரை ரசிகா்கள் எதிா்நோக்கி காத்திருக்கின்றனா் .