மன்சூா் அலிகானுக்கு எங்கே ரெட்காா்டு ? வைரலாகும் பிரபல பாடகியின் பதிவு!

மன்சூா் அலிகான் த்ரிசா குறித்து பேசிய பேச்சு கடந்த இரண்டு நாட்களாக பெரும் சா்ச்சைக்குள்ளாகியுள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தொிவித்துள்ளநிலையில்,அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் டிஜிபிக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், பின்னணிப் பாடகி சின்மயி தனது எக்ஸ் பக்கத்தில், ‘மன்சூர் அலிகான் பேச்சுக்கு எதாவது ஒரு யூனியன் ரெட் கார்டு கொடுப்பது, அவரை சங்கத்தில் இருந்து நீக்குமா அல்லது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது என எதாவது செய்வார்கள் என எதிர்ப்பார்த்தேன். ஆனால், 2-3 நாட்களாக அப்படி எதுவும் நடக்கவில்லை. அவர் ஊடகங்கள் முன்பு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மட்டும்தான் கூறினார்கள்.

இதுவே மாறாக என் விவகாரத்தில், பத்ம விருது பெற்ற பாடலாசிரியர் ஒருவரால் நான் துன்புறுத்தப்பட்டேன் எனக் கூறியதற்காக நான் உடனடியாகத் தடை செய்யப்பட்டேன். 5 ஆண்டுகளுக்குப் பிறகும், இந்தத் துறையில் பல ‘வீரர்கள்’ அவரைப் பற்றி பேசியதற்காக என்னைப் பற்றி அவதூறு பரப்பி வருகின்றனர்’ எனக் கூறியுள்ளாா்.இவாின் இத்தகைய பதிவிற்கு திரை ரசிகா்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனா்.

RELATED ARTICLES

Recent News