ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் இருந்து பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்த 6இ 556 என்ற எண் கொண்ட விமானத்தில் பயணி ஒருவர் குடிபோதையில், விமான ஊழியரிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார்.
எச்சரிக்கை விடுத்தும் அவரது செயலில் எந்த மாற்றமும் இல்லை என்பதால் இது குறித்து அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, அதிகாரிகள் அவரை கைது செய்தனர். மேலும் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதே போல், கடந்த மாதம், நியூயார்க்கில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்திலும் பயணி ஒருவர் விமான பணிப்பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.