காரில் இறந்து கிடந்த பிரபல மலையாள நடிகர்..!!

கேரள மாநிலம் கோட்டயத்தில் இருக்கும் பிரபல ஹோட்டல் அருகே கார் ஒன்று நேற்று வெகுநேரமாக நின்று கொண்டிருந்தது. ஹோட்டலில் வேலை செய்யும் பாதுகாவலர் அந்த கார் அருகில் சென்றபோது அதற்குள் ஒருவர் அசைவற்று இருந்ததை பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கார் கண்ணாடியை உடைத்து அந்த நபரை வெளியே எடுத்தனர். அந்த நபர் நடிகர் வினோத் தாமஸ் என்பது தெரிய வந்தது. இதையடுத்து வினோத் தாமஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரை பரிசோதனை செய்த மருத்துவர்களோ வினோத் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து பிரேத பரிசோதனைக்காக அவரின் உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

47 வயதான நடிகர் வினோத் தாமஸ் அய்யப்பனும் கோஷியும், ஜூன், ஹேப்பி வெட்டிங் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். வினோத் தாமஸ் குறித்து தகவல் அறிந்த பிரபலங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

RELATED ARTICLES

Recent News