விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்தின் டிரைலர், கடந்த 5-ஆம் தேதி அன்று, திரையரங்குகளில் வெளியானது.
இந்த டிரைலரை பார்த்த ரசிகர்கள், உற்சாகம் அடைந்தனர். டிரைலர் செம மாஸாக உள்ளது என்றும், கமெண்ட் பதிவிட்டு வந்தனர்.
இவ்வாறு சில பாசிட்டிவ்வான விஷயங்கள் டிரைலரில் இருந்தாலும், மிகவும் ஆபாசமான வார்த்தையை விஜய் பேசுவது போன்ற காட்சியும் இடம்பெற்றிருந்தது. இது, சில மகளீர் அமைப்புகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த வசனத்திற்கு, பலரும் தங்களது கண்டங்களை கூறி வந்தனர். இந்நிலையில், லியோ டிரைலரில் இடம்பெற்றிருந்த ஆபாச வார்த்தை, தற்போது நீக்கப்பட்டுள்ளது.