லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் லியோ. இதில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.
லியோ படத்தின் ட்ரைலர் கடந்த 5ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதுவரை 37 மில்லியன் பார்வைகளைக் கடந்து டிரெண்டிங்கில் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறது. இப்படம் வரும் 19ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் படத்தை ஒருநாள் முன்னதாகவே அதாவது அக்டோபர் 18ஆம் தேதி ரிலீஸ் செய்திட படக்குழு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.