சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகம் எனப்படும் பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தில் சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்’ என்ற கோரிக்கையை வலியுறுத்தி 4 ஆசிரியர் சங்கங்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
டெட் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, மீண்டும் போட்டித் தேர்வு நடத்தக்கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் சங்கத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று இரவில் பெய்த மழையைிலும் பொருட்படுத்தாமல் ஆசிரியர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால் அடுத்தடுத்து 30-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டக்களத்தில் மயக்கம் அடைந்து விழுந்தனர். இதையடுத்து அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 4வது நாளான இன்று 90-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எத்தனை பேர் மயக்கம் அடைந்தாலும், உயிரை இழக்க நேர்ந்தாலும் சரி, கோரிக்கையை நிறைவேற்றும் வரை உண்ணாவிரத போராட்டம் தொடரும் என்று ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பையும் , அதிா்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.