‘ஹாரி பாட்டர்’ போன்ற படங்களில் நடித்து உலக பிரபலமடைந்த ஆண்ட்ரூ லோகோகோவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
நிஜ வாழ்வில் போனி ரைட்டாக வலம் வரும் இவா் குழந்தையின் புகைப்படத்தை தனது மனைவியுடன் இஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் . குழந்தை கடந்த செப்டம்பர் 19ம் தேதி பிறந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அந்தப் பதிவில் அவர், குழந்தைக்கு எலியோ ஓஷன் ரைட் லோகோகோ எனப் பெயரிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும்,இவனின் வருகை எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தாய், சேய் இருவரும் நலமாக இருக்கிறார்கள். எங்கள் மகனை நாங்கள் அளவு கடந்து காதலிக்கிறோம். எங்கள் பிறப்பின் பயணத்தை மிகவும் அர்த்தமுள்ளதாக மாற்றியுள்ளதற்கு நன்றி’ எனவும் அவர் நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.