பொல்லாதவன் பட நடிகை மரணமா? ரசிகர்கள் அதிர்ச்சி!

சிம்புவின் குத்து, தனுஷின் பொல்லாதவன், சூர்யாவின் வாரணம் ஆயிரம் உள்ளிட்ட ஒருசில திரைப்படங்களில் நடித்துள்ளவர் நடிகை ரம்யா.

திவ்யா ஸ்பந்தனா என்றும் அழைக்கப்படும் இவர், சினிமாவில் இருந்து விலகி, தற்போது அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், திவ்யா மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக, சமீபத்தில் தகவல் பரவி வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள், இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால், அது முற்றிலும் வதந்தி என்றும், அவர் உயிருடன் தான் உள்ளார் என்றும் தற்போது தெரியவந்துள்ளது.

பத்திரிகையாளர் ஒருவருடன், திவ்யா எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகி, இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News