சிவசங்கர் பாபா வழக்கு : விசாரணைக்கு தடை விதிக்க முடியாது – நீதிமன்றம் அதிரடி

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிவசங்கர் பாபா போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து சிவசங்கர் பாபாவுக்கு கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

இதையடுத்து கேளம்பாக்கம் பள்ளியில் படித்த முன்னாள் மாணவி அளித்த புகாரின் பேரில் சிவசங்கர் பாபா மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சிவசங்கர் பாபா சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிவசங்கர் பாபா தரப்பில் வாதிடப்பட்டது. புகார் அளித்த மாணவியை காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்த சிபிசிஐடிக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும் . மாணவியை ஆஜர்படுத்தும் வரை வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க நீதிபதி வி.சிவஞானம் மறுப்பு தெரிவித்து வழக்கு விசாரணையை செப்டம்பர் 15-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

RELATED ARTICLES

Recent News