தமிழ் திரையுலகில் 1970-ம் ஆண்டுகளில் அறிமுகமானவர் நடிகை ஜெயசுதா. இவர் பாலசந்தரின் ‘அரங்கேற்றம்’, ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’, ‘நான் அவனில்லை ,அபூர்வ ராகங்கள்’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘பாண்டியன்’ படத்தில் அவரது சகோதரியாக நடிகை ஜெயசுதா நடித்துள்ளார்.
பன்மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ள இவர் 2009-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் செகந்திராபாத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.ஆனால் , அவர் கட்சியில் தீவிரமாக செய்லபடவில்லை என்றாலும் தெலுங்கு படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.
இந்த நிலையில், தெலங்கானா பாஜக தலைவர் பண்டி சஞ்சய் குமார் முன்னிலையில் அக்கட்சியில் நடிகை ஜெயசுதா சேர்ந்துள்ளார்.