இந்துக்கள் சாய்பாபவை வணங்குவதை நிறுத்த வேண்டும் என இந்துத்துவா அமைப்பின் தலைவர் ஒருவர் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் சாம்பாஜி பிடே. இவர் ஸ்ரீ சிவபிரதிஷ்தான் ஹிந்துஸ்தான் எனும் இந்துத்துவ அமைப்பின் நிறுவனராக உள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு காந்தியின் குடும்பத்தை வேறு ஒரு மதத்துடன் ஒப்பிட்டு பேசியிருந்தார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் மேலும் ஒரு சர்ச்சையான கருத்தை தெரிவித்துள்ளார். அதாவது “இந்துக்கள் சாய்பாபாவை வணங்குவதை நிறுத்திக்கொள்ள வேண்டும், அவருடைய கோயிலுக்கு செல்வதையும் நிறுத்த வேண்டும். அவர் இந்து கடவுள் இல்லை” இந்துக்கள் முதலில் தங்கள் வீடுகளில் இருந்து சாய்பாபாவின் புகைப்படங்கள் மற்றும் சிலைகளை அகற்றி எறிய வேண்டும். சாய்பாபாவை கடவுளாக கருத கூடாது” என்று கூறியுள்ளார்.
சாம்பாஜி பிடேவின் இந்த கருத்துக்கு காங்கிரஸ், என்சிபி உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.