ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் மாவட்டத்தில் இன்று பள்ளி பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இச்செய்தி கேட்ட காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர் இதில் 30 பள்ளி மாணவர்கள் காயமடைந்துள்ளநிலையில் ,ஒருவர் உயிரிழந்தார்.
மேலும், இது குறித்து ஜெய்சால்மர் உதவி சப் இன்ஸ்பெக்டர் கூறுகையில் ,பேருந்து மாணவர்களை பள்ளிக்கு ஏற்றி சென்று கொண்டிருக்கும்பொழுது , ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ,பேருந்து கவிழ்ந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
சிகிச்சைக்காக சில மாணவர்களை பெற்றோர்கள் ,தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.மீதம் இருப்போர், அருகிலிருக்கும் அரசு மருத்துவமனைக்கு சென்றதாக தகவல் வெளிவந்துள்ளது.