பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களுக்கு உரிமை கிடையாது ! ஜெயலலிதாவின்உறவினர்கள் மனு தள்ளுபடி !

சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடம் இருந்து பெறப்பட்ட பல பொருள்களை , ஏலம் விட வேண்டும் என்று பெங்களூருவை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் நரசிம்மமூர்த்தி பெங்களூரு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ,சிறப்பு வழக்கறிஞரை நியமனம் செய்தது.இதை எதிர்த்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா மற்றும் தீபக் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து பொருட்களையும் அவரது சட்டரீதியான வாரிசான தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்தனர்.சொத்து குவிப்பு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் சொத்துக்களை வாரிசுகளுக்கு வழங்க இயலாது என லஞ்ச ஒழிப்பு போலீசார் பதில் அளித்தனர்.

எனவே,தீபாமற்றும் தீபக் ஆகியோரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதோடு ,சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை வாரிசுதாரர்கள் உரிமை கோர முடியாது என சிறப்பு நீதிமன்ற நீதிபதி மோகன் தீர்ப்பு அளித்தார்.

RELATED ARTICLES

Recent News