ஆந்திர மாநிலம் அல்லூரி சீதாராமராஜு மாவட்டத்தில் 36 கிராமங்களை இணைக்கும் சாலை உள்ளது. இதில் லட்சுமிபுரம் ஊராட்சிக்குற்பட்ட பர்ரிகுடா கிராமத்தில் இருந்து கடாகுடா கிராமத்துக்கு செல்ல ஓடையைக் கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில் , சாதாரண நாட்களில் ஓடையில் குறைந்தளவு தண்ணீர் செல்ல கூடிய நிலை இருக்கும். மழை காலத்தில் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், ஆற்றை கடக்க கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
எனவே கடந்த சில நாட்களாக பெய்த மழையால், ஆற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. இதனால் அவதிக்குள்ளான கிராம மக்கள் ஆற்றை கடக்க பல வித சாகசங்கள் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது .அதன்படி பைக்கை தோளில் சுமந்து கொண்டு ஆற்றை கடக்கும் போது பைக் இழுத்து செல்லப்பட்டது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படாமல் அருகில் இருந்த கிராம மக்கள் உதவியுடன் பைக் மீற்கப்பட்டது .
சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்கு மேல் ஆனபோதிலும் , 36 பழங்குடியினர் வசிக்கும் கிராமத்தை இணைக்கும் ஆற்றில் , பாலம் இல்லாததால் , மக்கள் அவதிக்குள்ளகியுள்ளனர் . மேலும் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் யாரும் சரி செய்ய முன் வரவில்லை என்றும் வருத்தம் தெரிவிக்கின்றனர் . இந்த நிலையில் அரசு முற்றிப்புள்ளி வைக்க ஒரு பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கேட்டு கொண்டுள்ளனர்.