கோவை சரக டிஐஜி விஜயகுமார் இன்று காலை நடைப்பயிற்சி சென்று வந்தபின் தனது முகாம் அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவரது உடல் சாலை வழியாக தேனி ரத்தினம் நகர் பகுதியில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டது.இந்நிலையில் விஜயகுமாரின் உடலை பார்த்து அவரது தாய் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுத சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
விஜயகுமாரின் உடலுக்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ பெரியசாமி தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் உள்ளிட்ட உயர் காவல் அதிகாரிகள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்
பின்னர் , மலர் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் காவல் உயர் அதிகாரிகள்,அவரது உடலை ஊர்வலமாக எடுத்து சென்று தேனி மின் மயானத்தில் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுன் உடல் தகனம் செய்யப்பட்டது.