திருப்பதி மாவட்டம் பங்காருப்பேட்டை அரசுப் பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு ,ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.இதனை ,சிறுமியின் வாயிலாக பெற்றோர் அறிந்து கொண்டனர்.
இதனால் ,ஆத்திரமடைந்த பெற்றோர் உள்ளூர் மக்களுடன் சேர்ந்து பள்ளியை முற்றுகையிட்டனர்.ஒன்றுசேர்ந்த மக்கள் ஆசிரியரை தாக்கி போலீசில் ஒப்படைத்தனர்.
இதனை அறிந்த மண்டல கல்வி அலுவலர் வெங்கடேஸ்வரலு பள்ளிக்கு வந்து பார்வையிட்டார் .இதன்படி , பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டு,ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் வீடு திரும்பினர் .பள்ளியில் பணியாற்றும் மூன்று ஆசிரியர்கள் மீது குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில்,இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டனர், மற்றொரு ஆசிரியர் வேறு இடத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
எதிர்காலத்தில் இதுபோன்று நடக்காத வகையில் குழந்தைகளுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் உறுதி அளிப்போம் என கல்வி அலுவலர் வெங்கடேஸ்வரலு தெரிவித்துள்ளார் .