ஹவுராவில் இருந்து செகந்திராபாத் சென்று கொண்டிருந்த ஃபலக்னுமா எக்ஸ்பிரஸிஸ் ரயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது. உள்ளே இருந்த பயணிகள் இறக்கிவிடப்பட்டனர்.

இந்த விபத்தில் எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த ரயிலில் 3 பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
தற்போது தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒடிசா ரயில் விபத்துக்கு பிறகு, சரக்கு ரயில் தடம் புரள்வது போன்ற ரயில் விபத்து சம்பவங்கள் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.