பஞ்சாப் மாநிலம், லூதியானாவில் பிரகாஷ் தாபா என்ற பிரபலமான உணவகம் உள்ளது. இந்த ஹோட்டலுக்கு ஒருவர் குடும்பத்துடன் சாப்பிட சென்றுள்ளார். அப்போது அவர்கர்கள் சிக்கன் கிரேவி ஆர்டர் செய்துள்ளனர்.

அந்த சிக்கன் கிரேவியில் சிக்கனுக்கு பதிலாக எலி இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் அதனை வீடியோவாக எடுத்து இணயத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
இந்த வீடியோவை பார்த்த பலரும் இந்த உணவகத்தின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி வருகின்றனர்.