கே.ஜி .எப் திரைப்பட இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் அடுத்ததொரு பிரம்மாண்டமாக ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் சலார் .இத்திரைப்படத்தின் கதாநாயகனாக பாகுபலியின் ஹீரோ பிரபாஸ் களமிறங்கியுள்ளார்.எனவே பாகுபலியை தொடர்ந்து இப்படத்தின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இப்படத்தின் டீசர் வெளியீட்டு தேதி வெளிவந்துள்ளது. இதனை படக்குழுவானது தேதி ,நேரத்தோடு போஸ்டர் ஒன்றை
வெளியிட்டுள்ளது.அதன்படி இப்படத்தின் டீசர் ஜூலை 6 ஆம் தேதி காலை 5.12 மணிக்கு வெளிவரும் என்று தகவல் வெளிவந்துள்ளது.
இத்தகைய திடீர் நேர வெளியீடு குறித்து நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர் .மேலும் , பிரபாஸ் பிரசாந்த் நீல் ரசிகர்கள் போஸ்டரை ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.