கணவரை விவாகரத்து செய்யும் நடிகை அசின்?…வெளியான ஷாக்கிங் தகவல்

மோகன் ராஜா இயக்கத்தில் கடந்த 2004ம் ஆண்டு வெளியான M. குமரன் S/O மகாலட்சுமி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அசின். படம் வெற்றி பெற்றதால் அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. தமிழ் சினிமாவில் அறிமுகமான இரண்டே ஆண்டுகளில் முன்னணி நடிகை என்கிற அந்தஸ்த்தையும் பெற்றிருந்தார் அசின்.

இதையடுத்து கஜினி, சிவகாசி, போக்கிரி, தசாவதாரம் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் நடித்தார். பாலிவுட்டுக்கு சென்ற இவர் சல்மான் கான், ஆமீர் கான் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து மேலும் பிரபலமடைந்தார்.

கடந்த 2016-ம் ஆண்டு மைக்ரோமேக்ஸ் நிறுவனம் ராகுல் சர்மா என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகினார் அசின். கடந்த 2017-ம் ஆண்டு அசின் – ராகுல் சர்மா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் நடிகை அசின் தனது கணவரை விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராகுல் சர்மாவுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும், இதனை அறிந்த அசின் அவரை எச்சரித்தும், அவர் கேட்காததால் அவரை விவாகரத்து செய்ய முடிவெடுத்து உள்ளதாக கூறப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News