டாட்டூவை காண்பித்த ரசிகர்…உணர்ச்சி வசப்பட்ட தமன்னா…!

விஜய், அஜித், தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து பிரபலமடைந்தவர் தமன்னா. தற்போது, ரஜினிகாந்த்தின் ஜெயிலர் படத்திலும் நாயகியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகை தமன்னா விமான நிலையம் ஒன்றிற்கு சமீபத்தில் சென்றுள்ளார். அப்போது, அங்கு வந்த ரசிகர் ஒருவர், தன் கையில் வரையப்பட்டிருந்த தமன்னாவின் டேட்டூவை காண்பித்தார்.

இதனை பார்த்து உணர்ச்சிவசப்பட்ட அவர், அந்த ரசிகரை கட்டிப்பிடித்து, கண்கலங்கினார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது.