மதுரையில் பிரபலமானவர்களில் ஒருவர் நெட்டிசன்களால் ரவுடிஎன்று அழைக்கப்படும் ரவுடி வரிச்சியூர் செல்வம்.இவர் தன்னை பெருமைப்படுத்திக்கொள்ளும் விதமாக நடமாடும் நாடகக்கடையாக தன்னை பாவித்து கொண்டும் தன்னை ரவுடி என்று அழைக்கவேண்டாம் எனவும் தான் ஒரு அப்பாவியான ஜோக்கர் என்று பல காணொளிகளை வெளியிட்டு வந்தார் .இதனால் மதுரை மட்டும் அல்லது தமிழகம் முழுவதும் பிரபலமானவர் ரவுடி வரிச்சியூர் செல்வம்.
இவருடன் விருதுநகரை அடுத்த அல்லம்பட்டியை சேர்ந்த செந்தில்குமார் பல மாத காலங்களாக கூட்டாளியாக இருந்து வந்தார்.இடையில் செல்வத்திற்கும் ,செந்தில்குமாரிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பிரிந்ததாக தெரியவருகிறது .
இதற்கிடையில் கருப்பாயூரணி ஊராட்சி தலைவர் கொலை விவகாரத்தில் செந்தில்குமார் சேர்க்க பட்டிருந்தார். இதன்தொடர்பாக காவல்துறையினர் தனிப்படை அமைத்து செந்தில்குமாரை தேடி வந்தனர் .
இந்த விசாரணையில் செந்தில்குமாரின் அலைபேசி தகவல்களை ஆய்வு செய்ததில் இறுதியாக வரிச்சியூர் செல்வத்திடம் பேசியதாக தகவல்கள் கிடைத்தது . செல்வத்திடம் விசாரணை தீவிரம் அடைந்ததன் காரணமாக தன் கூட்டாளியான செந்தில் குமாரை துப்பாக்கியால் சுட்டு ,உடல்களை இரு கூறுகளாக துண்டாக்கி தாமிரபரணி ஆற்றில் வீசியது அம்பலமானது . இந்த விசாரணைக்கு பிறகு வரிச்சியூர் செல்வத்தை காவல் துறையினர் கைது செய்தனர்.