மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷண் மீது 7க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் பாலியல் புகார் தெரிவித்தனர். இதற்கு ஆதரவாக மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் பாலியல் புகார் தெரிவித்த வீராங்கனையை நேற்று பிரிஜ் பூஷணின் அதிகாரபூர்வ அரசு இல்லத்திற்கு அழைத்து சென்று காவல்துறையினர் விசாரித்தனர்.
இந்த விசாரணையில் சர்வதேச மல்யுத்த போட்டி நடுவரான ஜக்பீர் சிங்க் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். கடந்த 2013ஆம் ஆண்டு பிரிஜ் பூஷண் மதுபோதையில் பெண்களிடம் அத்துமீறினார் என்றும், அதனை தாமே கண்களால் பார்த்திருப்பதாகவும் கூறியுள்ளார்.