மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவின் லோரெட்டோ கல்லூரியில் பட்டம் பெற்ற கீதாஞ்சலி ஐயர், 1971 ஆம் ஆண்டில் தூர்தர்ஷனில் சேர்ந்தார்.
30 ஆண்டுகளாக தூர்தர்ஷனில் பணியாற்றி வந்த கீதாஞ்சலி ஐயர் 4 முறை சிறந்த தொகுப்பாளர் விருதை வென்றுள்ளார். மேலும் 1989 ஆம் ஆண்டில் சிறந்த பெண்களுக்கான இந்திரா காந்தி பிரியதர்ஷினி விருதையும் வென்றார்.

இந்நிலையில் கீதாஞ்சலி ஐயர் நேற்று காலமானார். அவருக்கு வயது 71. கீதாஞ்சலி ஐயருக்கு ஒரு மகன் மற்றும் மகள் பல்லவி ஐயர் உள்ளனர், அவர் ஒரு விருது பெற்ற பத்திரிகையாளரும் ஆவார்.