தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித். இவர், தன்னுடன் அமர்க்களம் படத்தில் ஜோடியாக நடித்த நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். ஷாலினியின் சகோதரரான ரிச்சர்ட் ரிஷி என்பரும், சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான திரௌபதி, ருத்ரதாண்டவம் ஆகிய படங்களும், வெற்றி பெற்றிருந்தன. இந்நிலையில், ரிச்சர்ட் ரிஷி, பிரபல கவர்ச்சி நடிகை ஒருவரை காதலித்து வருவதாக தகவல் பரவி வருகிறது. அதாவது, இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி உள்ளிட்ட படங்களில், கவர்ச்சி வேடங்களில் நடித்திருந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த்.
இவரும், ரிச்சர்ட் ரிஷியும், பல்வேறு இடங்களில், ஒன்றாக பயணித்து வருவதாக கூறப்படுகிறது. இதுமட்டுமின்றி, யாஷிக ஆனந்த், தனக்கு முத்தம் கொடுத்திருப்பதை புகைப்படமாக எடுத்து, சமூக வலைதளங்களில், ரிச்சர்ட் ரிஷி பதிவிட்டிருந்தார். இதனை வைத்து பார்க்கும்போது, இருவரும் காதலிப்பது உறுதி என்றே ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இந்த தகவல் உறுதியாகும் பட்சத்தில், அஜித் வீட்டு மருமகளாக யாஷிகா ஆனந்த் மாறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த காதல் விவகாரம் குறித்து, இதுவரை இருவரும் எந்தவொரு அறிவிப்பும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.