பாலியல் புகாரில் பாஜக எம்.பி மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து ஒலிம்பிக் பதக்கங்களை கங்கையில் வீச மல்யுத்த வீரர்கள் வருகை தந்துள்ளனர்.

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ்பூஷண் சரண்சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்த மல்யுத்த வீரர்கள் கடந்த ஏப்ரல் 23-ந்தேதி முதல் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். மேலும் போராட்டம் நடத்த அனுமதியும் மறுக்கப்பட்டது.
போட்டிகளில் நாட்டிற்காக வென்ற பதக்கங்களை கங்கை நதியில் வீசப்போவதாக, மல்யுத்த வீரர்கள் அறிவித்த நிலையில் தற்போது ஹரித்வாருக்கு வருகை தந்துள்ளனர்.
பதக்கங்களை கங்கையில் வீச மல்யுத்த வீரர்கள் வருகை..!#RajNewsTamil #Uttarakhand #Wrestlers #Haridwar #WrestlersProtest pic.twitter.com/NMigX35kcS
— Raj News Tamil (@rajnewstamil) May 30, 2023