டெல்லியில் ரூ.1,250 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்றத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சாமிகள் தலைமையில் 20 ஆதீனங்கள் பங்கேற்றனர்.

ஆதீனங்கள் முன்னிலையில் செங்கோல் முன் பிரதமர் மோடி தரையில் விழுந்து வணங்கினார். பிறகு செங்கோலை கையில் ஏந்தியபடி ஆதீனங்களிடம் பிரதமர் மோடி ஆசி பெற்றார்.